தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு

புதன், 26 ஜனவரி 2022 (18:46 IST)
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது
 
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை விவரம் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
 
21 மாநகராட்சியின் 138 நகராட்சி 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் மார்ச் 4ஆம் தேதி மேயர் மற்றும் நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்ததற்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்