நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், அதை சென்னை மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளால் குணப்படுத்த முடியவில்லை என்பதால், இங்கிலாந்தில் உள்ள பிரிட்ஜ் மருத்துவமனையில் பணிபுரியும் ரிச்சர்ட் ஜான் பீலே என்ற சிறப்பு மருத்துவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
அவர் கடந்த வெள்ளிக்கிழமை ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதித்து விட்டு, மருத்துவமனையிலிருந்து வெளியேறிய போது, கிடைத்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.
அவரது சிகிச்சைக்குப்பின் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் இன்னும் சில நாட்கள் சென்னையில் தங்கியிருந்து, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.