இந்த நிலையில் திடீரென மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ், ஜிப்மர் உட்பட 11 மருத்துவ நிறுவனங்களுக்கு மட்டும் தனியாக ஒரு தேர்வு நடத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன
இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 13 கொலைகள் செய்த நீட்டுக்கு விலக்கு இல்லை. ஆனால் ஏழை மாணவர்கள் எய்ம்ஸ்-ஜிப்மர் போன்ற மத்தியரசு நிறுவனங்களில் PG மருத்துவ படிப்பில் சேருவதை தடுக்க புதிதாக INI-CET எனும் ஆயுதத்தை அனுப்புகிறார்கள். இனியும் உயிர்களை இழக்க தமிழகம் தயாரில்லை. NEET, INI-CET என அனைத்தையும் ரத்து செய்க.