மக்கள் பணியே... எனக்கான பரிசு - கழகத்தினருக்கு உதயநிதி கோரிக்கை!

வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:12 IST)
திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தாளை கொண்டாட வேண்டாம் என கோரியுள்ளார். 

 
உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனிடையே தனது பிறந்தநாளை கழகத்தினர் கொண்டாட வேண்டாம் என கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
2015 ஆம் ஆண்டை விட அதிக மழை பெய்தும் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததற்கு களப்பணி ஒரு முக்கியமான காரணம். அந்த வகையில் நான் எனது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதியிலும் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவி வருகிறேன். 
இந்த சூழலில் எனது பிறந்த நாளையொட்டி என்னை வாழ்த்தவும் பிறந்த நாளை மையமாக வைத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக மூத்த முன்னோடிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கவும். என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவும் வகையில் இருக்க வேண்டுமே தவிர அவர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கவே கூடாது. 
 
எனவே பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ் பேனர்கள் வைப்பது போன்ற ஆடம்பரங்களில் அறவே தவிர்க்க வேண்டும். இது போன்ற ஆடம்பர ஏற்பாடுகளுக்கு ஆகும் கூடுதல் செலவை நலத்திட்ட உதவிகளை பயன்படுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படி மக்களுக்கு பயனுள்ள வகையில் எனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அமையுமானால் அதைவிட மகிழ்ச்சி தருவது எனக்கு வேறு ஒன்றும் இருக்க முடியாது என்று  குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்