கமலை டீலில் விட்ட அமைச்சர் உதயநிதி… மாமன்னனே கடைசி!!

புதன், 14 டிசம்பர் 2022 (10:53 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள மாமன்னன் படம்தான் என்னுடைய கடைசி படம் என உதயநிதி ஸ்டாலின் பேட்டி.


உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட்டது முதலே அவர் அமைச்சர் ஆவார் என பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று 'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி பின்வருமாறு பேசினார்…

அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி, அமைச்சர் பதவி எனக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு. வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்ற விமர்சன வரும் என தெரியும். என்னுடைய உழைப்பின் மூலம் மட்டுமே விமர்சங்களுக்கு பதிலளிப்பேன். தமிழகத்தை விளையாட்டுத்துறை தலைநகராக மாற்றுவதே என் இலக்கு.

அமைச்சராகியுள்ளதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள மாமன்னன் படம்தான் என்னுடைய கடைசி படம். நடிகர் கமல் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த படத்தில் இருந்து விலகி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்