தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தனிப் பெரும்பாண்மையோடு திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் 40 ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கும் ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளதை அடுத்து திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். இதையடுத்து அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கமாக எந்த அரசியல் விஷயங்களிலும் தலையிடாத ஏ ஆர் ரஹ்மானே ஸ்டாலினையும் திமுகவையும் வாழ்த்தி ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என வாழ்த்துக் கூறியுள்ளார். ரஹ்மானின் வாழ்த்துகளுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.