அடிமைகள் அடிக்கும் கொள்ளையை பார்த்து கொரோனாவே ஓடிடும் - உதயநிதி ட்விட்!

திங்கள், 7 செப்டம்பர் 2020 (10:34 IST)
கொரோனா பேரைச் சொல்லி அடிமைகள் அடிக்கும் கொள்ளையைப் பார்த்து கொரோனாவே ஓடினால் தான் உண்டு என உதயநிதி ட்விட் போட்டுள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் இந்த மாதம் பல தளர்வுகள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இன்னும் 80 சதவீதத்திற்கு அதிகமாக கொரோனா பாதிப்பு அடுத்த மாதங்களில் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், கோவையில் கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்தும் தங்களது வீடு தகரம் அடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதை நூதனமாக கண்டித்துள்ளார் வீட்டின் உரிமையாளர். போஸ்டரில், கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள். கோவிட்-19 இல்லாத 4 பேருக்கு கொரோனா இருக்கு என்ற முத்திரை குத்தி என்னையும் எனது குடும்பத்தாரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் என அவர் அடித்து வீட்டின் முன் மாட்டியுள்ளார். 
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு அரசின் அலட்சியத்தையும் மக்கள் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து திமுக இளைஞரணி செயளாலட் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 
 
அமைச்சருக்கு COVID-19 வந்தால் நெகட்டிவ் என புளுகுவது. அதுவே சாமானியர்களுக்கு நெகட்டிவ் என்றால் பாசிட்டிவ் என பொய் சொல்லித் தட்டி வைத்து கமிஷன் அடிப்பது. கொரோனா பேரைச் சொல்லி அடிமைகள் அடிக்கும் கொள்ளையைப் பார்த்து கொரோனாவே ஓடினால் தான் உண்டு எனத் தமிழகமே புலம்புவது வேதனை தருகிறது என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்