திரை உலக பிரபலங்கள் சிலர் இந்தி மொழிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீசர்ட்களை அணிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. குறிப்பாக டிவிட்டரில் #இந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் நேற்று வைரல் ஆனது, இன்று டிரெண்டாகிக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது #திமுக_வேணாம்_போடா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. திமுக அரசியல் ஆதாயத்திற்கு பிற மொழியை இழிவுப்படுத்துவதாகவும், கலாசாரத்தை சீர் குலைப்பதாகவும் பதிவிடப்பட்டு வருகிறது.