நீட் தேர்வு கட்டுப்பாடுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் சாடல்!

ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (17:39 IST)
இன்று நடைபெற்ற நீட் தேர்வுகளில் கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

நாடு முழுவதும் இன்று மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் மாணவர்களை நீண்ட நேரம் காக்க வைத்து மதிய உணவு கூட உண்ணவிடாமல் தேர்வுக்கு அனுப்பியதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுகுறித்து பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன் சமூகவலைதளப் பக்கத்தில் ‘2 மணி தேர்வுக்குக் காலை 11-க்கே வந்துவிட வேண்டும். மதிய உணவு இல்லை. தமிழ் அறிவிப்பு இல்லை. கையுறைகூட குறிப்பிட்ட நிறத்தில். வெயிலில் பெற்றோர்-கழிப்பறை வசதியில்லை. நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம். #BanNeet_SaveTNStudent’ எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்