சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தபோது அதில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட போது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
அம்பேத்கர் பேசாததை, பெரியார் பேசாததை, திருமாவளவன் பேசாததை நான் பேசவில்லை என்றும், என் கொள்கையில் நான் உறுதியாக இருப்பேன் என்றும், இதில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதை நான் சட்டப்படி சந்திப்பேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.