நம்பர் ஒன் அமைச்சர் இவர்தான்: உதயநிதியிடம் பாராட்டு பெற்றவர் யார் தெரியுமா?

செவ்வாய், 11 ஜனவரி 2022 (17:32 IST)
தமிழக முதல்வரின் தலைமையிலான அமைச்சரவையில் நம்பர்-1 அமைச்சர் இவர்தான் என உதயநிதியிடம் பாராட்டு பெற்ற அமைச்சருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
கடந்த 8 மாதங்களாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும் அவருடைய ஆட்சியில் அமைச்சர்களும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக அமைச்சர்களில் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதும் அவரது பணியை அவ்வப்போது முதல்வரை பாராட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு குறித்து உதயநிதி கூறியபோது திமுக ஆட்சி அமைக்கும் முன் இந்துக்களுக்கு விரோதமாக கட்சி என்ற தவறான கருத்தினை பரப்பினார்கள் என்றும் அதிரடியாக செயல்பட்ட அமைச்சர் சேகர்பாபு அதனை மாற்றி உள்ளார் என்றும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர்களில் நம்பர்-ஒன் அமைச்சராக சேகர்பாபு உள்ளார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்