முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர்!

ஞாயிறு, 9 ஜனவரி 2022 (14:43 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் நன்றி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக முதல்வராக கடந்த மே மாதம் பதவி ஏற்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அதிரடியாக ஆட்சி செய்து வருகிறார் என்பதும் அவரது ஒவ்வொரு அறிவிப்பும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் சட்டமன்றத்தில் அம்மா உணவகங்களை மூடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அம்மா உணவகம் தமிழகத்தில் தங்கு தடை இன்றி செயல்படும் என்றும் உறுதிபட தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்
 
தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அனைத்து கட்சி தலைவர்களும் நன்றி தெரிவித்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் அவர்கள் தனது நன்றியை தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் அம்மா உணவகம் தங்குதடையின்றி செயல்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பதை தமிழ்நாடு வரவேற்கிறது என்றும் நாங்களும் வரவேற்கிறோம் என்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் உதயகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்