மருத்துவ படிப்பில் மாநில அரசுகளே 100% இடங்களையும் விரைவில் நிரப்பும்: முதல்வர் ஸ்டாலின்

வெள்ளி, 7 ஜனவரி 2022 (19:15 IST)
மருத்துவ படிப்பில் மாநில அரசுகளே 100 சதவீத இடங்களையும் நிரப்பும் காலம் விரைவில் வரவேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை படிப்புகள் மட்டுமின்றி எம்பிபிஎஸ் போன்ற இளநிலை படிப்பிலும் அகில இந்திய தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மேலும் அந்தந்த மாநில ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றி 100 சதவீத இடங்களையும் மாநில அரசை நிரப்பிக்கொள்ளும் நடைமுறை வரவேண்டும் என்பது தான் திமுகவின் நிலை என்றும் அந்த நிலை விரைவில் வரும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்