மதுரையில் ஒரே ஒரு செங்கல், திண்டுக்கல்லில் ஒரே ஒரு பலகை: உதயநிதி!

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (19:12 IST)
மதுரையில் ஒரே ஒரு செங்கலை வைத்து இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என ஏமாற்றியது போல் திண்டுக்கல்லில் ஒரே ஒரு பலகையை வைத்து இதுதான் மாநகராட்சி என ஏமாற்றிக் கொண்டிருக்கும் அடிமை அரசுக்கா உங்கள் வாக்கு என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது
 
ஒற்றை செங்கல்லை வைத்து மதுரை #AIIMS என ஏமாற்றியது போல்,திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கான எந்த கட்டமைப்பையும் ஏற்படுத்தாமல் ஒரேயொரு பலகை வைத்து மாநகராட்சி என ஏமாற்றி வந்த அடிமைகளுக்கு சட்டமன்ற தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலிலும் பாடம் புகட்டுங்கள் என உதயநிதி பேசினார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்