முடிந்தால் சட்டசபையை முடக்கி பாருங்கள்: ஈபிஎஸ்-க்கு உதயநிதி சவால்

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (08:15 IST)
தமிழக சட்டப்பேரவையை முடிந்தால் முடக்கி பாருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு  திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார் 
 
நெல்லை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் 
 
அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி கஜானாவை காலி செய்து விட்டதாக தெரிவித்தார். சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை கட்டாயம் நிறைவேற்றுவோம் என்றும் அவர் கூறினார் 
 
தமிழக சட்டப்பேரவையை முடிந்தால் முடக்கி பாருங்கள் என்றும், அப்படியே முடக்கபப்ட்டு தேர்தல் நடைபெற்றால் கடந்த முறை வெற்றி பெற்றதை விட அதிக இடங்களில் திமுக வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்