அரசியல் என்றால் என்ன என்பதை தேர்தலுக்கு பின் விஜய் புரிந்து கொள்வார்: எஸ்.வி. சேகர்

Siva

வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (14:05 IST)
நடிகரும் அரசியல் விமர்சகருமான எஸ்.வி. சேகர், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் நடிகர் விஜய்க்கு அரசியலும் தேர்தலும் என்றால் என்ன என்பதை புரியவைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 
விஜய்க்கு கூடும் கூட்டம் எம்.ஜி.ஆருக்கு கூடிய கூட்டத்தை போல் உள்ளதா என்ற கேள்விக்கு அவர், "எம்.ஜி.ஆர். நேரடியாக கோடம்பாக்கத்திலிருந்து கோட்டைக்கு போகவில்லை. அவர் 20 ஆண்டுகள் திமுகவில் உழைத்த பின்னரே கட்சி ஆரம்பித்தார். சினிமாவில் பாட்டு பாடியவுடன் வந்து முதலமைச்சர் ஆகவில்லை," என்று பதிலளித்தார்.
 
திருச்சியில் வந்த கூட்டம் நாகப்பட்டினத்தில் வரவில்லை. மனப்பாடம் செய்து மூன்று நிமிடம் பேசுகிறார். அங்கிள் என்று சொல்வது எல்லாம் சினிமாவில் கைதட்ட மட்டுமே உதவும்," என்று விமர்சித்தார்.
 
விஜய் இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் உழைக்க வேண்டும். அரசியல் என்பது சனிக்கிழமை மட்டும் வந்து பேசுவது அல்ல. அது 24 மணி நேரமும் செய்யக்கூடிய ஒரு சேவை. இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்," என்று எஸ்.வி. சேகர் அழுத்தமாகக் கூறினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்