ஆனால் கௌசல்யா செயினை இறுக்க பிடித்துக் கொண்டதால் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தார். அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சிங்காநல்லூர் காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேல் மற்றும் அபிஷேக் என்ற இருவரை பிடித்து காரையும் பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே சில குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடல் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.