பாஜக மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா இதுகுறித்து கூறுகையில், "கர்நாடகாவில் பெய்த கனமழையால் விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். ஆனால், முதல்வர் இன்னும் பயிர் சேதங்களை மதிப்பிட அதிகாரிகளை அனுப்பவில்லை. ஆனால், இந்த அரசு கேரளாவிற்கு நிதி வழங்குவதில் மும்முரமாக உள்ளது," என்று அவர் கூறினார்.
இருப்பினும், காங்கிரஸ் இதுகுறித்து விளக்கமளிக்கையில் "பிரதமர் மோடி மனிதாபிமான அடிப்படையில் மற்ற நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பினார். நமது அண்டை மாநிலங்களுக்கு உதவுவதில் என்ன தவறு இருக்கிறது? என்று கூறியுள்ளது.