ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தூத்துகுடியில் நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதள சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு நிலைமை வெகுவாக சீரடைந்து வருகிறது.