துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை; முதல்வர் உத்தரவு

செவ்வாய், 22 மே 2018 (20:05 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

 
தூத்துகுடியில் இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி, கண்ணீர்குண்டு, மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் போலீஸ் தடியடியால் பலருக்கு மண்டை உடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு கூடுதலாக காவல்துறையினர் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
 
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
 
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலாலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து வலியுறுத்தினார். 
 
இதையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்