தூத்துக்குடி துப்பாக்கி சூடு: 13 பேர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் கூடுதல் நிதி!

புதன், 16 நவம்பர் 2022 (13:29 IST)
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராட்டம் நடந்தபோது இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதனையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் தற்போது 13 பேர் குடும்பத்திற்கு கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் 
இதனை அடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 13 பேர் குடும்பங்களும் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்