இன்று தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி, மக்கள் விரும்பாத ஆட்சி, தடுமாறுகின்ற ஆட்சி நடைபெறுகிறது. அரசாங்க மேடையில் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல், திமுக மாடல் என்று வரம்பு மீறி பேசியிருக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். தேர்தல் அறிக்கையில் கூட ஸ்டாலின் ஒன்றிய அரசு, திராவிட மாடல் பற்றி சொல்லவில்லை.
தடுமாற்றம் தெரிகிறது இந்த ஆட்சியில், காரணம் பழனிச்சாமி கம்பெனி மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் இவர்கள் மீதும் இன்று வருகிறது. விடியல் அரசு, தமிழ்நாடு விடியப் போகிறது என்றும் சொன்னார்கள். ஆனால் இன்று இருண்ட தமிழகம் தான், திமுக எப்போது வந்தாலும் தமிழகம் இருளும். இருண்ட தமிழகம் தான் உருவாகி இருக்கிறது. இந்த ஆட்சி தடுமாறுகிறது. மக்கள் நிச்சயம் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என கூறினார்.