தினகரனிடம் சிக்கி சின்னபின்னமான ரங்கராஜ் பாண்டே - வைரல் வீடியோ

திங்கள், 27 நவம்பர் 2017 (12:01 IST)
தந்தி தொலைக்காட்சியில் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவை தினகரன் விளாசிய விவகாரமே இன்று சமூகவலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக வலம் வருகிறது.


 
தந்தி தொலைக்காட்சியில் இடம் பெறும் கேள்விக்கெனன் பதில்’ நிகழ்ச்சியில் நேற்று டிடிவி தினகரனை பாண்டே பேட்டியெடுத்தார். அப்போது, சசிகலாவின் மகன் விவேக் பற்றி கேள்வி எழுப்பிய பாண்டே, இத்தனை கோடி சொத்து அவருக்கு எப்படி வந்தது என கேள்வி எழுப்ப, கோபமடைந்த தினகரன் பாண்டேவை பேச விடாமல் பதிலளித்து  திணறடித்தார்.
 
உங்கள் கேள்வியில் உள் நோக்கம் இருக்கிறது. விஷமத்தனமாக கேள்வி கேட்கிறீர்கள்? மக்களிடம் தவறான எண்ணத்தை பரப்புகிறீர்கள். சம்பளம் வாங்கிக் கொண்டு, ஊடகம் என்ற பெயரில் நீங்கள் கேட்கும் அனைத்தும் கேள்விகளுக்கும் நாங்கள் பதில் கூற வேண்டுமா?.
 
விவேக்கை பற்றியே உங்கள் கேள்வியே தவறு. அவர் ஜெயா தொலைக்காட்சியின் சி.இ.ஓ மட்டுமே. முதலாளி கிடையாது என ஏகத்துக்கும் பிடிக்க, பாண்டே தடுமாறினார். அவர் எவ்வளவோ சமாளிக்க முயன்றும், தினகரனிடம் அது எடுபடாமல் போனது.
 
இறுதியில் மக்கள் மனதில் இருப்பதைத்தான் நான் கேட்க நினைத்தேன் என மழுப்ப, மக்கள் மனதில் ஒன்றுமில்லை. உங்களிடம்தான் தவறு இருக்கிறது என தினகரன் பதிலடி கொடுக்க, இறுதியியில் தனிப்பட்ட முறையில் உங்களை தாக்குவது என் நோக்கமில்லை. அப்படியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஜகா வாங்கினார் பாண்டே.
 
இதனையடுத்து, பாண்டேவை மடக்கிய தினகரனை பலர் ஹீரோவாக பார்க்கத் தொடங்கிவிட்டனர். அவரை பாராட்டி கருத்துகளும் தெரிவித்து வருகின்றனர். தினகரன் நல்லவரா? கெட்டவரா? என்பது இல்லை. ஆனால், பாண்டேவை மடக்கியதற்காகவும், ஊடகங்களின் முகத்திரையை அவர் கிழித்து எறிந்ததற்காக அவரை பாராட்டுகிறோம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 
 
அந்த பேட்டி 47.50 நிமிடம் நீடித்தது. ஆனால், தினகரன் மடக்கியதை கட் செய்து விட்டு வெறும் 40.29 நிமிட வீடியோவை மட்டுமே தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Photo & video - Courtesy to Thanthi Tv

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்