கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பி.எஸ் அணியில் 11 எம்.எல்.ஏக்கள் மற்றும் 12 எம்.பிக்கள் மட்டுமே இருந்தனர். எங்கள் பக்கம் 122 எம்.எல்.ஏக்கள் மற்றும் மற்றும் 37 எம்.பி.க்கள் இருந்தனர். ஆனால், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதிலேயே தேர்தல் ஆணையம் குறியாக இருந்தது.
ஆனால், தற்போது எடப்பாடி பக்கம் 111 எம்.எல்.ஏக்கள் மற்றும் குறைவான எம்.பி.க்களே இருக்கிறார்கள். ஆனால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. நீதிபதி சாதிக் அலியின் தீர்ப்பை அன்று ஏன் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை?