அவசரம், அடிதடி: கலைக்கப்படும் போராட்டத்திற்கு காரணம் இது தானா??

திங்கள், 23 ஜனவரி 2017 (10:55 IST)
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஒருவார காலமாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர். 


 
 
இந்நிலையில், அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீசாரின் கோரிக்கையை மாணவர்கள் இதை ஏற்க மறுத்து விட்டனர்.
 
இதனையடுத்து மாணவர்களை வலுக்கட்டாயமாக அகற்றி வருகின்றனர். மேலும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டக்காரர்களை போலீஸார் கலைத்து வருகின்றனர்.
 
இவ்வாறு நடக்கயில், இந்த அவசர போராட்டக் கலைப்பிற்கு காரணமான மூன்று முக்கிய உண்மைகள் வெளிவந்துள்ளது.
 
நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு மெரினா கடற்கரையில் ஒத்திகை பார்க்கப்படும். 20 ஆம் தேதியே இதை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் மாணவர்கள் போராட்டத்தால், இன்று வரை ஒத்திகை நடைபெறவில்லை. மேலும், மாணவர்கள் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அறிவிப்பதாகவும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து, தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இதை முன்னிட்டு அமைச்சர்கள் மெரினா வழியில் தான் செல்வார்கள். அங்கு தான் மாணவர்கள் போராட்டம் நடைபெறுகிறது. ஆகையால்  போராட்டக்கார்களால் அமைச்சர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டு விடும்  என்று காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். 
 
இன்று அதிகாலை 3 மணியில் இருந்து காவல்துறை தனது வேலையை ஆரம்பித்துள்ளது, அதுவும் விவேகானந்தர் மண்டபத்தின் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

இதற்கான முக்கிய காரணம், போராட்டகாரர்களின் மையப்பகுதியாக அது கருதப்படுகிறது. மேலும், அதிகாலை வேலையில், கூட்டம் சற்று குறைவாக இருக்கும் என்பதால் இவ்வாறு செய்திருக்க கூடம் என தெரியவந்துள்ளது.
 
ஆனாலும், மாணவர்கள் போலீஸாருக்கு பிடி கொடுக்காமல் கடலில் இறங்கியும், போலீஸாரை எதிர்த்தும் போராடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்