ஆட்டம் காட்டி அடங்கிய முருகன்: முடிவுக்கு வந்த லலிதா ஜுவல்லரி வழக்கு!!

வெள்ளி, 11 அக்டோபர் 2019 (14:36 IST)
லலிதா ஜுவல்லரி திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான முருகன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். 
 
சமீபத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் கிளையில், ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைப்போனது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதனைத் தொடர்ந்து திருவாரூரில் மணிகண்டன் என்பவரை போலீஸார் 5 கிலோ நகைகளுடன் கைது செய்தனர். அவருடன் சேர்ந்து திருடிய சீராத்தோப்பு சுரேஷ் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்துக்கு தலைவனாக செயல்பட்ட முருகனையும் போலீஸார் தேடி வந்ததனர். 
இந்நிலையில் சுரேஷ் கடந்த சில தினகங்களுக்கு முன்னர் செங்கம் கோர்ட்டில் சரணடைந்த நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த முருகன் இன்று பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். 
 
தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தனது கைவரிசையை காட்டியுள்ளான் முருகன். கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் முருகன் தொடர்புடையவனாக இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முருகன் சரணடைந்ததன் மூலம் லலிதா ஜுவல்லரி கொள்லை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றாவாளிகள் அனைவரும் கைதாகி உள்ளனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்படும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்