பட ஸ்டைலில் தங்கம் கடத்திய 150 பேர்: ஒரே நாளில் 70 கிலோ தங்கம் பறிமுதல்!

புதன், 6 நவம்பர் 2019 (14:13 IST)
திருச்சி விமான நிலையத்தில் திரைப்பட பாணியில் தங்கம் கடத்திய நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் நூதனமான முறையில் பலர் தங்கத்தை கடத்தி வருவதாய் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து சிறப்பு அதிகாரிகள் குழுவினர் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய மலேசியா, துபாய், சிங்கப்பூர் என பலநாட்டு விமான பயணிகளிடமும் சோதனைகள் நடத்தினர்.

இந்த சோதனையில் பலர் சாக்லேட் பாக்ஸ், உள்ளாடை என பலவற்றிலும் தங்கத்தை மறைத்து எடுத்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் மலவாய் பகுதியில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கம் கடத்தல் குற்றத்திற்காக நேற்று மட்டும் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 70 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தும் கும்பலின் கை வரிசை அதிகமாகியுள்ளதாக அதிகாரிகள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். பிடிப்பட்டவர்களில் அதிகமானோர் தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்