வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு. நாளை முதல் பேருந்துகள் ஓடும்

செவ்வாய், 16 மே 2017 (22:18 IST)
தமிழக போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வந்த நிலையில் இன்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



 


முதற்கட்டமாக நிலுவைத் தொகை ரூ.1000 கோடியை தர அரசு ஒப்புதல் அளித்ததால் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் பணிக்கு திரும்புவார்கள் என்றும் தமிழகம் முழுவதும் நாளை முதல் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்