டிடிவி தினகரனுக்கு எதிராக களத்தில் குதித்த டிராஃபிக் ராமசாமி!

திங்கள், 27 மார்ச் 2017 (11:54 IST)
ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் போட்டியிடுவதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.


 
 
ஆர்கே நகரில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுகின்றன. இரட்டை இலை முடக்கப்பட்டதை அடுத்து டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் களம் இறங்கியுள்ளார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகாரை அடுத்து இவரது வேட்புமனுவை நிறுத்தி வைத்திருந்த தேர்தல் ஆணையம் இறுதியில் ஏற்றுக்கொண்டது.
 
இந்நிலையில் இந்த விவகாரத்தை சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றுள்ளார். டிடிவி தினகரன் சிங்கப்பூர் பிரஜை அவரது வேட்புமனுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷிடம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையீட்டுள்ளார்.
 
மேலும் டிடிவி தினகரனை சுயேட்சை வேட்பாளராக கருத வேண்டும், அவர் தொகுதியில் உள்ள 10 பேரிடம் கையெழுத்து வாங்காமல் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இதனால் அவரது வேட்புமனுவை ஏற்றது தவறு என சுட்டிக்காட்டியுள்ளார் டிராஃபிக் ராமசாமி. இந்த புகார் குறித்த விசாரணை இன்று பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்