சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்! 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெருக்கடி..!

வெள்ளி, 10 நவம்பர் 2023 (16:34 IST)
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்  செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே 10 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி காரணமாக வரிசையாக நின்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் தீபாவளி கொண்டாட சென்று வருகின்றனர். தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை காரணமாக செங்கல்பட்டு பகுதியை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்