மெட்ரோ ரயில் பணி: சாந்தோமில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்..!

Siva

வெள்ளி, 8 மார்ச் 2024 (08:35 IST)
சென்னையின் ஒரு சில இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் காரணமாக போக்குவரத்து மாற்றப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக சாந்தோம் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

காமராஜர் சாலை காந்தி சிலையிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பில் லூப் ரோடு, பட்டினப்பாக்கம் பேருந்து டெர்மினஸ், தெற்கு கால்வாய் வங்கி சாலை சந்திப்பு (சாந்தோம் ஹை ரோடு - டிஜிஎஸ் தினகரன் சாலை சந்திப்பு) நோக்கி திருப்பிவிடப்படும்.

அதேபோல் காரணீஸ்வரர் கோயில் தெரு சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் கட்டாயம் இடதுபுறம் திரும்பி லைட் ஹவுஸ் வழியாக இலக்கை அடையலாம்.

 காரணீஸ்வரர் கோயில் தெருவில் இருந்து பாபநாசம் சிவன் சாலை சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

லூப் ரோடு, சாந்தோம் நெடுஞ்சாலை அடுத்த 3 மாதங்களுக்கு ஒருவழி பாதையாக இருக்கும் எனவும் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்