தென் மாவட்டங்களில் மழை வெள்ளம்.. என் மண் என் மக்கள் யாத்திரையை ஒத்தி வைத்த அண்ணாமலை

செவ்வாய், 19 டிசம்பர் 2023 (18:00 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை  நடத்தி வந்த நிலையில் தென் தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஒத்திவைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
கனமழை காரணமாக தென்மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது வேதனையை அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில், தமிழக பா.ஜனதா தென்மாவட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறோம். 
 
பொதுமக்களுடன் தோளோடு தோளாக நின்று, தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் களத்தில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருவது ஆறுதலை தருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தேவைகளை நிறைவேற்றி உதவ தென் மாவட்ட மக்களை நாளை (புதன்கிழமை)மற்றும் நாளை மறுநாள், நேரில் சென்று சந்திக்க உள்ளேன். 
 
அன்றைய தினங்களில் நடைபெற இருந்த 'என் மண் என் மக்கள்' பயணம் வேறு தினங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்