அதில், தமிழகத்தில் இன்று 13 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில், ஆண்கள் 9 பேர் என்றும், பெண்கள் 4 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா 2 பேரும், வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட மொத்தம் 9 மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கொரொனா பாதிப்பில் இருந்து நேற்று 42 பேர் குணமடைந்ததாகவும், கொரொனாவால் பாதிக்கப்பட்டு 113 பேர் சிகிச்சை பெறுவதாகவும், கொரொனா தொற்றால் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.