தேர்வு மையத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த தேர்வர்கள்: டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் பரபரப்பு..!

ஞாயிறு, 7 மே 2023 (17:01 IST)
டிஎன்பிஎஸ்சி தேர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் அதில் தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு மையத்தின் கதவை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் காஞ்சிபுரம் அருகே நடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏனாத்தூரில் டி.என்.பி.எஸ்.சி. ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையில் சாலை ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை எழுதும் சிலர் மதியம் 1.30 மணிக்கு  வராததால் தேர்வு மைய கதவுகள் மூடப்பட்டது.
 
இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட தாமதமாக வந்த தேர்வர்கள் வெளியில் காத்திருந்த நிலையில், போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் தேர்வு மையத்தின் கதவை உடைத்து தேர்வர்கள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்