தமிழகத்தில் இன்று மேலும் 459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,42,730 பேராக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 491 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,26,011 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று கொரொனாவால் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சென்னையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,32,603 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ,தற்போது, தமிழகத்தில் 4,328 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது