தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மா நகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியதை அடுத்து, நடிகர் கமல், பகத்பாசி, விஜய்சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்கிய படம் விக்ரம். இப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
சமீபத்தில், இப்படத்தில் பணியாற்றிய துணை இயக்குனர்கள் பைக்குகள் வாங்கிக் கொடுத்த கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷுக்கு சொகுகார் வாங்கிக் கொடுத்தார். சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் வாங்கிக்கொடுத்தார். இந்த நிலையில், நேற்று இப்படக்குழுவினருக்கு கமல் சார்பில் விருந்து வைக்கப்பட்டது. இவர்களுடன் இணைந்து கமல், அனிருத், லோகேஷ் ஆகியோர் சாப்பிட்டனர்.
இந்த நிலையில், இன்று லோகேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், கமல்ஹாசன், லோகேஷ், உதயநிதி,விஜய்சேதுபதி மற்றும் அனிருத் ஆகியோருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.