சென்னையின் எந்தெந்த பகுதியில் இன்று பவர்கட்.. முழு விவரங்கள்

Siva

செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:38 IST)
மாதாந்திர பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று அதாவது ஜனவரி 30ஆம் சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் இதோ:

தி நகர் பகுதியில் உள்ள உஸ்மான் சாலை, பஸ்ஸுல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதி புரம், உண்ணாமலை அம்மாள் தெரு, ஹபிபுல்லா சாலை, ரங்கன் தெரு, ராஜன் தெரு, நேரு தெரு, மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, ரங்கராஜபுரம், CRP கார்டன், ரயில்வே பார்டர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் இன்று மின்தடை

அதேபோல் அடையாறு பகுதியில் உள்ள வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர் நகர், தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், ராஜலட்சுமி நகர், திரௌதியம்மன் கோவில் தெரு, வி.ஜி.பி.செல்வா நகர் , பெத்தேல் அவென்யூ, அண்ணாநகர், அன்னை இந்திரா நகர், காந்தி சாலை, சீதாபதி நகர், கோல்டன் அவென்யூ, குபேரா நகர், பாலாஜி காலனி, அஷ்டலட்சுமி நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, ராஜீவ் நகர், காமராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின்தடை.

கிண்டி பகுதியில் உள்ள எஸ்.டி. தாமஸ் மவுண்ட் நந்தம்பாக்கம், பட் சாலை, பூந்தமல்லி உயர் சாலை, மீனம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் பகுதியிலும், பொன்னேரி பகுதியில் உள்ள இருளிப்பட்டு அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, ஜனபஞ்சத்திரம் கூட் சாலை, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர் விருந்தாவன் நகர், எம்.கே கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.விஇ பண்ணை, மாலிவாக்கம், அமூர் ஜெகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் இன்று மின் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்