மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை! – குறையுமா என மக்கள் ஏக்கம்!

வியாழன், 2 ஜூலை 2020 (08:28 IST)
கடந்த சில நாட்களாய் எதிர்பாராத அளவிற்கு வேகமாக விலை உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் இன்று மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையாகி வருகிறது.

தமிழகத்தில் கோரோனா பாதிப்பினால் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ள நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோலுக்கான வரி 28லிருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி 20லிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர தொடங்கியது. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 4 பைசா உயர்ந்து ரூ.83.63க்கும், டீசல் லிட்டருக்கு 11 பைசா உயர்ந்து ரூ.77.72க்கும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்றும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து இதே விலையில் விற்பனையாகி வந்தாலும், இதுவே அதிக விலை என மக்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்