தமிழ்நாடு முழுவதும் இன்று லாரிகள் ஓடாது.. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

வியாழன், 9 நவம்பர் 2023 (07:47 IST)
வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது  

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் நவம்பர் 9ஆம் தேதி லாரிகள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து வேலை நிறுத்தம் என்று அறிவித்திருந்தது. எனவே இன்று சுமார் 6 லட்சம் லாரிகள் ஓடாது என்பது குறிப்பிடத்தக்கது.  

வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் உட்பட  சில கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதாக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.  

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது  இருந்தாலும் காய்கறிகள் உள்பட அத்தியாவசியமான பொருட்களுக்கான வாகனங்கள் மட்டும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே காய்கறி உள்ளிட்ட முக்கிய பொருட்கள் கொண்டு வரப்படும் என்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்