முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சியில் அதிருப்தி ஏற்பட்டால் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா கடிதத்தை கொடுத்ததால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சபாநாயகர் ராஜினாமா கடிதங்களை ஏற்கவில்லை. இதனையடுத்து இதுகுறித்த வழக்கு ஒன்று நீதிமன்றத்துக்கு சென்றது. நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் ராஜினாமா எம்எல்ஏக்கள் குறித்த முடிவை சபாநாயகரே எடுக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது
ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சட்டசபையின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு எம்எல்ஏக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்படும். முதலில் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை தூக்குவார்கள். அவர்கள் எண்ணப்பட்டு அவர்களிடம் கையெழுத்து வாங்கப்படும். அதன்பின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கையை தூக்குவார்கள். அவர்களிடமும் கையெழுத்து வாங்கப்படும். இதன் பின்னர் ஓட்டெடுப்பின் முடிவு அறிவிக்கப்படும்