மாமல்லபுரம் நினைவு சின்னங்களை பார்க்க இலவச அனுமதி! – தொல்லியல் துறை அறிவிப்பு!
வெள்ளி, 19 நவம்பர் 2021 (08:34 IST)
உலக மரபு வாரம் கடைபிடிக்கப்படும் நிலையில் மாமல்லபுரம் வரலாற்று சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பக்கலைக்கு மிகசிறந்த சான்றாக அமைந்துள்ளது. இங்குள்ள பல்லவர் கால கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று நவம்பர் 19 முதல் 25ம் தேதி வரை உலக மரபு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதை சிறப்பிக்கும் விதமாக இன்று ஒருநாள் மட்டும் மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று சின்னங்களை சுற்றி பார்க்க இலவச அனுமதி அளிக்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.