இன்று மிக நீளமான சூரிய கிரகணம் – எப்படி பார்க்கலாம்?

ஞாயிறு, 21 ஜூன் 2020 (08:11 IST)
இன்று நிகழும் சூரிய கிரகணம்தான் இந்த ஆண்டின் மிக நீளமான சூரிய கிரகணம் என சொல்லப்படுகிறது.

இன்று காலை 10.42க்கு தொடங்கும் சூரிய கிரகணம் மதியம் 1.41 மணிக்கு நிறைவடைகிறது. இந்த ஆண்டின் மிக நீளமான கிரமணமான இது வளைய சூரிய கிரகணம். முழு சூரிய கிரகணம் இல்லை. இதனை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. வழக்கமாக கிரகணத்தை சென்னையில் உள்ள பிர்லா கோலரங்கில் பார்க்க ஏற்பாடு செய்யப்படும். ஆனால் இம்முறை கொரோனா தொற்று நோய் காரணமாக அதற்கு ஏற்பாடு செய்யவில்லை.

கிரகணத்தை பார்ப்பதற்காக www.iiap.res.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்