பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

புதன், 20 ஏப்ரல் 2022 (07:30 IST)
கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் சற்றுமுன் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94  எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களுக்கு முன் தினமும் 75 காசுகள் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்ததால் பெட்ரோல் விலை 110 ரூபாயையும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்