டிஎன்பிஎஸ்சி : தமிழ் பாடத்திட்டம் வெளியீடு

வியாழன், 23 டிசம்பர் 2021 (19:00 IST)
டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட  நிலையில் இதற்கான  தமிழ்பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழக அரசு  தமிழ் நாட்டில் அரசு  வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு கிடைக்கும் பொருட்டு,  தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு முன்பு  தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் எடுத்து  தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தப்படும் என அறிவித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இ ந் நிலையில் இன்று டி.என்.பி.எஸ்.சி   கட்டாய தமிழ்மொழி தகுதி  தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளை வெளியிட்டுள்ளது.

Group 1, Group 2 மற்றும் 2A, தேர்வுகளில் இடம்பெறும் முதன்மைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம், தமிழ் மொழி தகுதித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் பற்றி கீழுள்ள லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும்.https://t.co/KLfHVCz0nj

Pass it on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்