அனைவருக்கும் நன்றி – இயக்குனர் பாரதிராஜா நெகிழ்ச்சி!

சனி, 22 ஆகஸ்ட் 2020 (18:01 IST)
பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யத்துக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமே பிரார்த்தனை செய்து வருகிறது. இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார் எஸ் பி பியின் மகன் சரண்.

இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா எஸ் பி பிக்காக கூட்டு பிராத்தனை செய்ய சொல்லி திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார். அதன்படி நேற்று மாலை 6.30 மணிக்கு கூட்டுப்பிராத்தனை நடந்து முடிந்தது. இப்போது பிராத்தனையில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பாரதிராஜா.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்