சமீப காலமாக ஆளுனர் ஆர்.என்.ரவி – திமுக அரசு இடையே பல்வேறு முரண்பாடுகளும், மோதல்களும் ஏற்பட்டு வந்தன. சட்டமன்றத்தில் ஆளுனர் உரையில் சில பகுதிகளை பேசாமல் விட்டதும், பாதியிலேயே சட்டசபையை விட்டு வெளியேறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள குடியரசு தினத்தையொட்டி ஆளுனர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்திற்கு தமிழ்நாடு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு ஆளுனர் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் ஆளுனரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விசிக அறிவித்தது. அதை தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவுத்துள்ளன.
எதிர்கட்சிகளின் தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “ஆளுனரின் தேநீர் விருந்தை எதிர்கட்சிகள் புறக்கணிப்பதால் ஆளுனருக்கு தேநீர் செலவு மிச்சம்” என்று கூறியுள்ளார். ஆளுனரின் தேநீர் விருந்து குறித்து திமுக இன்னமும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.