ரெம்டெசிவிரை ப்ளாக்ல வித்தா கடும் நடவடிக்கை! – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (12:29 IST)
கொரோனாவுக்கு அவசியமான ரெம்டெசிவிர் மருந்தை கள்ளசந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை என தமிழக சுகாதார செயலாளர் எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை தமிழக அரசு நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் கவுண்டர்கள் அமைத்து விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் வாங்கி 20 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்ற டாக்டர் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்” என எச்சரித்துள்ளார்.

மேலும் “சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவை தடுப்பது சவாலான காரியமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்