அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!

வெள்ளி, 9 ஜூன் 2023 (10:16 IST)
அனுமதி இன்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கோவையில் பேனர் விழுந்து மூன்று பேர் பலியான நிலையில் விளம்பர பலகைகள் விவகாரத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி திருத்தப்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி உரிமை பெறாமல் பேனர் வைக்க கூடாது. அனுமதி இன்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 
 
பேனர் விளம்பர பலகைகள் வைப்பதில் விதிகளை மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். உரிமைக்காலம் முடிந்த பின்பு வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும். 
 
பேனர் உள்ளிட்டவற்றால் உயிரிழப்பு நேர்ந்தால் அதனை வைத்த நிர்வாகம் அல்லது தனிநபர் தான் இழப்பீடு வழங்க வேண்டும் இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்