மண்டல போக்குவரத்து முறை ரத்து; மாவட்ட அளவில் முடக்கம்!? – முக்கிய முடிவுகள் குறித்த தகவல்!

புதன், 24 ஜூன் 2020 (14:40 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் தேனி, மதுரை ஆகிய பகுதிகளிலும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.  தற்போது கொரோனா பாதிப்பின் அடிப்படையில் தமிழக மாவட்டங்கள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்குள் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் மண்டல முறையை ரத்து செய்து மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்துகளை இயக்கவும், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளை மாவட்ட எல்லைகளை மூடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்