ரூ.68 கோடி டெபாசிட்: வேதா இல்லத்தை வசமாக்கும் தமிழக அரசு?

சனி, 25 ஜூலை 2020 (08:33 IST)
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக நீதிமன்றத்தில் 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது. 
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு எஸ்டேட், போயஸ் கார்டன் வீடு என சுமார் 900 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளது. இறக்கும் முன் இவற்றை ஜெயலலிதா யாருக்கும் உயில் எழுதி வைக்கவில்லை. 
 
இதனால் இவற்றை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என அரசு விரும்பியது.
 
இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் வழக்கு தொடர, உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டது. 
 
எனவே, வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.36 கோடி மற்றும் வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக ரூ.32 கோடி என மொத்தம் ரூ.68 கோடியை ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளது. 
 
அதாவது ஒரு சதுர அடிக்கு ரூ.12,000 என கணக்கிட்டு வாசிகளுக்கு நிவாரணமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்